கதவைத் திறந்து
தீக்குச்சியாய்
என்
மீது
தீக் குளித்தாய்....!
நானோ
கவிதைகளால்
அணைத்து வருகிறேன்....
நீயோ
நின்று விடுகிறாய்
உன் கனவுச்
சிலம்பைத் தேடுவதுடன்......!
என்னை
சிந்திக்கத் தெரியாதவள் ....
கவிதைகளில்,
நினைவுகளில் ,
விபத்தாகும்
வீதியோரங்களில் ,
திறந்து பார்க்கும்
யன்னல் விளிம்புகளில் ,
உறங்கும்
போர்வைகளுக்குள் ,
என்னை சிந்திக்கத் தெரியாதவள்
நீ மட்டும் தான்......!
அழகால்
எல்லைகளைத்
தாண்டியவள்
நீ .....!
அழகே ...!
விழிகளால்
எல்லை அமைத்துள்ளேன்
முடிந்தால்
தகர்த்து விடு....!
இல்லையேல்
சரணடைந்து விடு....!
இன்னும் ஒரு
கீதை
எழுத உள்ளேன்
உன்
முடிவில் ....!