Friday, 22 February 2013

அர்த்தமுள்ள காலச் சக்கரம்

இறுதிப் பக்கங்களில்
முற்றுப் புள்ளிக்கு
முன்பாக
அமர்ந்திருந்த
என்
எழுத்தாணிகள்.....!
கனவுகள்
சீவி முடிந்த
பொழுதுகளாய்.....!
மாயனின்
முடிந்த
வருடங்கள்
போன்று.......!
ஒரு அர்த்தமுள்ள
காலச் சக்கரம்
என்று வரும் என்ற
எதிர்பார்ப்பில் ....!

Thursday, 21 February 2013

வாழ்க்கை....!

கவிதைகளால்
உன்
ஜன்னலைத்
திறந்தேன் ..................................................................................................................................................................................
நிர்வாணப் பட்டது
என்
முகங்கள்.....!
கிழித்தெறியப் பட்டன
நம்
கவிதைகளும்.....!
தெரு ஓரமாக
உருக்குலைந்த
ஒரு சடலமாய்
நம்
வாழ்க்கை....!

Sunday, 17 February 2013

தீக்குச்சி

கதவைத் திறந்து
தீக்குச்சியாய்
என்
மீது
தீக் குளித்தாய்....!
நானோ
கவிதைகளால்
அணைத்து வருகிறேன்....
நீயோ
நின்று விடுகிறாய்
உன் கனவுச்
சிலம்பைத் தேடுவதுடன்......!